PUBLISHED ON : செப் 28, 2020

லாஜிடெக் நிறுவனம், புதிதாக,'லாஜிடெக் எம்.எக்ஸ்., எனிவேர் 3' எனும் ஒயர்லெஸ் மவுசை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஒயர்லெஸ் மவுசின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று, வீடியோ சேட் செட்டிங்ஸை மாற்றிக்கொள்ள வசதியாக, தனியாக ஒரு பட்டன் பக்கவாட்டில் வழங்கப்பட்டிருப்பது தான்.
இந்த பக்கவாட்டு பட்டன் மூலமாக, வீடியோ அழைப்பின்போது, கேமரா மற்றும் மைக் ஆகியவற்றின் செட்டிங்ஸை, நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
இந்த புதிய வகை மவுசில், இரண்டு மாடல்கள் உள்ளன.'எம்.எக்ஸ்., எனிவேர் 3' மாடல் மவுசை, விண்டோஸ், மேக், குரோம் ஓ.எஸ்., லினக்ஸ் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.
அடுத்து,'எம்.எக்ஸ்., எனிவேர் 3 மேக்' மாடல் மவுசானது, மேக் கம்ப்யூட்டர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
'எம்.எக்ஸ்., எனிவேர் 3' மாடல் மூன்று வண்ணங்களிலும் 'எம்.எக்ஸ்., எனிவேர் 3 மேக்' ஒரே ஒரு வண்ணத்திலும் வந்துள்ளது.
யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங் வசதி கொண்ட இந்த மவுசில், ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 70 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
விலை இந்திய மதிப்பில்: 5,900 ரூபாய்.
