உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 09, 2022

அ நிறம் | அளவு
அமெரிக்காவின் 'மார்க் லெவின்சன்' நிறுவனம், 'நுகர்வோர் மின்னணு கண்காட்சி 2022'ல் ஆடம்பர ஹெட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மிகத் துல்லியமான இசையை விரும்புபவர்களுக்கானது, இந்த ஹெட்போன்.
இதன் விலை, 'ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ்'ன் விலையை விட இருமடங்கு அதிகமாகும். 'மார்க் லெவின்சன் என்.ஓ., 5909' எனும் இந்த ஹெட்போன், இந்திய மதிப்பில் 74 ஆயிரத்து, 500 ரூபாய் ஆகிறது.
சிறப்பம்சங்கள்:
தோலினால் அமைந்தது
40 மி.மீ., டிரைவர்கள்
வெளிப்புற சப்தங்களை தடுக்கும் ஏ.என்.சி., தொழில்நுட்பம்
34 மணி நேரம் தாங்கும் பேட்டரி
மூன்று வண்ணங்கள்
