PUBLISHED ON : ஆக 28, 2022

'பேஸ்புக்' என அழைக்கப்பட்ட 'மெட்டா' நிறுவனம், 1,000 டாலர் அதாவது, கிட்டத்தட்ட 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்' ஐ அக்டோபரில் அறிமுகம் செய்ய உள்ளது.
இது குறித்த அறிவிப்பை, மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார். இந்த வி.ஆர். ஹெட்செட், தற்போது உள்ள 'மெட்டா குவெஸ்ட் 2' சாதனத்தை விட மிகவும் மேம்பட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாம் சிரித்தால் அல்லது முகம் சுளித்தால், அல்லது நமது வெளிப்பாடு எதுவாக இருந்தாலும், அதை நிகழ்நேரத்தில் வழங்கிவிடும் அளவுக்கு தொழில்நுட்ப வசதியை இந்த ஹெட்செட் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கண், முகம் ஆகியவற்றின் அசைவுகளை 'டிராக்' செய்யும் வகையில், தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதாக இருக்கும் என கூறப்படும் இந்த வி.ஆர்.ஹெட்செட் விலை, நிச்சயமாக ஆயிரம் டாலருக்கும் அதிகமாகவே இருக்ககூடும் என்கிறார்கள்.
