PUBLISHED ON : ஏப் 26, 2021

'மைக்ரோசாப்ட் கிளாஸ்ரூம் பென் 2'அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில், முதன் முதலாக, மைக்ரோசாப்ட் கிளாஸ்ரூம் பென் அறிமுகம் ஆனது. இப்போது, மேம் படுத்தப்பட்டு, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் பேனா, மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ, சர்பேஸ் புரோ லேப்டாப் ஆகியவற்றில் பயன்படுத்தக் கூடியாதாகும். குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியது.இந்த டிஜிட்டல் பேனா, காகிதப் பயன்பாட்டை மிகவும் குறைக்க பயன்படும் என்பது மற்றொரு சிறப்பு.
ஒரு பேனா என்று வாங்க முடியாது. 20 பேனா கொண்ட செட் ஆகத்தான் வாங்கலாம். விலை, 30 ஆயிரம் ரூபாய் ஆகிறது. பழைய டிஜிட்டல் பேனா, 60 ஆயிரம் ரூபாய் என இருந்தது. இப்போது விலை பாதியாகிவிட்டது.
முதற்கட்டமாக, இம்மாத இறுதியிலிருந்து, அமெரிக்காவில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக, மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
