PUBLISHED ON : மார் 08, 2021

'ஹார்மேன் இன்டர்நேஷனல்' நிறுவனம், 'ஜே.பி.எல்., பூம்பாக்ஸ் 2, ஜே.பி.எல்., கோ 3, ஜே.பி.எல்., கிளிப் 4' ஆகிய 'புளுடூத் ஸ்பீக்கர்'களை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இவை மூன்றும், 'ஜே.பி.எல்., பூம்பாக்ஸ், ஜே.பி.எல்., கோ 2, ஜே.பி.எல்., கிளிப் 3' ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட மாடல்களாகும்.
ஜே.பி.எல்., பூம்பாக்ஸ் 2: ஜே.பி.எல்., பூம்பாக்ஸ்களிலேயே, மிகவும் சப்தமான ஸ்பீக்கர் இது என்கிறார்கள். இதனுள்ளேயே 'பவர் பேங்'கும் உள்ளது. தண்ணீர் புகாது. பேட்டரி, 24 மணி நேரம் தாக்குப்பிடிக்கும். கறுப்பு வண்ணத்தில் வந்துள்ளது.விலை: 33,999 ரூபாய். ஜே.பி.எல்., கோ 3: தண்ணீர், துாசு ஆகியவை புகாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புளுடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது. 'யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' மூலம் 'சார்ஜ்' ஏற்றிக் கொள்ளலாம்.கறுப்பு, நீலம், சிவப்பு என, மூன்று வண்ணங்களில் வந்துள்ளன. விலை: 3,999 ரூபாய்.ஜே.பி.எல்., கிளிப் 4: இந்த ஸ்பீக்கர், பத்து மணி நேரம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவும் தண்ணீர், துாசு புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வண்ணங்களில் மட்டுமின்றி; கலவை வண்ணங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை: 4,499 ரூபாய்.
