உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 14, 2021

அ நிறம் | அளவு
கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்களில் 'புளூடூத்' வசதியை பயன்படுத்தாமலிருக்கும் போதும், பெரும்பாலானவர்கள் அதை 'ஆன்' செய்தே வைத்திருப்பர். ஆனால், அது கூடாது என்கிறார்கள், நிபுணர்கள். பயன்படுத்தாத போது புளூடூத் இணைப்பை துண்டித்துவிடுவது பாதுகாப்பானது என்கிறார்கள்.
காரணம், தற்போது புளூடூத் இணைப்பின் ஊடாக புகுந்து, நாம் எங்கிருக்கிறோம் என்பது போன்ற தகவல்களை திருட முடியும் என்கிறார்கள். இருப்பினும், இப்போதைக்கு அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், விரைவில் இணைய குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், இவற்றுக்கும் தீர்வை கண்டுபிடித்துவிடுவார்கள் என்றும் எச்சரிக்கின்றனர்.
அப்படி நிகழும்பட்சத்தில், இது பெரும்பாலும் பிரபலங்களுக்கு சிக்கல் தருவதாக அமைந்துவிடும்.
