PUBLISHED ON : நவ 14, 2021

நோக்கியா' பிராண்டின் உரிமம் பெற்றுள்ள 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், அமெரிக்காவில் 'நோக்கியா எக்ஸ் 100' எனும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது, இந்நிறுவனத்தின் சமீபத்திய 5ஜி போன் ஆகும்.
மேலும், இதற்கு முன் அறிமுகம் ஆன 'நோக்கியா எக்ஸ் 10' ஸ்மார்ட்போனில் இருக்கும் பல சிறப்பம்சங்கள் இதிலும் உள்ளன.
இம்மாதம் 19ம் தேதி முதல் இந்த போன்கள் அமெரிக்காவில் கடைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் எப்போது அறிமுகம் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 11
6.67 அங்குல முழு எச்.டி., திரை
48 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
நான்கு கேமரா செட் அப்
விரல் ரேகை ஸ்கேனர் வசதி
எப்.எம்., ரேடியோ
யு.எஸ்.பி.,டைப் சி போர்ட்
கூகுள் அசிஸ்டென்ட் பட்டன்
4,470 எம்.ஏ.எச்., பேட்டரி
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
217 கிராம்
விலை: 6 ஜி.பி., + 128 ஜி.பி., கொண்ட போனின் தோராய விலை 18,700 ரூபாய்.
