உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 07, 2021

அ நிறம் | அளவு
பிரபல சீன நிறுவனமான 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்ல் பை, அதிலிருந்து விலகி, லண்டனில், 'நத்திங்' எனும் புதிய நிறுவனத்தை துவக்கினார். அத்துடன், 'நத்திங் இயர்' எனும், முழுக்க முழுக்க அனைத்து அம்சங்களும் வெளியில் தெரியும்படியான இயர்பட்சையும் அறிமுகம் செய்தார். இதற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிட்டியது.
இந்நிலையில் இந்நிறுவனம், அடுத்தகட்டமாக 5 புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில் ஒரு சாதனம், இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் ஆகும் என்றும்; மற்றவை அடுத்த ஆண்டில் அறிமுகம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில், புதிய இயர்பட்ஸ் அறிமுகம் ஆகும் என்கிறார்கள். அடுத்த ஆண்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
