PUBLISHED ON : மார் 18, 2021

'நெட்பிளிக்ஸ்' வாயிலாக, படங்கள் மற்றும் சீரீஸ்களை பார்ப்பவர்களில் பலர், நண்பர்கள், உறவினர்கள் யாரிடமிருந்தாவது, பாஸ்வேர்டை வாங்கி பார்ப்பது, நம் ஊர்களில் சகஜமான ஒன்றாக இருக்கிறது. இப்போது அதற்கு 'ஆப்பு' வைக்கும் முயற்சியில், நெட்பிளிக்ஸ் இறங்கி இருக்கிறது.
இதற்கான சோதனை முயற்சியில் இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது
குறிப்பிட்ட கணக்கு எண்ணை பரிசோதிக்க, பயனரிடம் உறுதி செய்வதற்கான குறியீடை கேட்கப்படும். இந்த குறியீடு, கணக்கு யார் வசம் இருக்கிறதோ அவர்களுக்கு முதலில் அனுப்பப்படுகிறது. அதை, உள்ளீடு செய்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும்.
இது ஒருவகையில், கணக்கு எண் வைத்திருப்பவர்களுக்கும் வசதியான ஒன்றே. அவர் தனக்கு விருப்பமானவருக்கு தன்னுடைய, ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டை கொடுத்தால், அதை வாங்கியவர், கொடுத்தவர் அனுமதி இன்றி, தனக்கு வேண்டியவர்களுக்கும் கொடுத்து விடுகிறார். இது கணக்கு எண் வைத்திருப்பவருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இனி, இதுவும் தவிர்க்கப்பட்டு விடும்.
