PUBLISHED ON : மார் 18, 2021

எல்.ஜி.நிறுவனம், 'டிவி'களுக்கான, தன்னுடைய, 'வெப் ஓ.எஸ்.,' எனும் இயங்கு தளத்தை, பிற நிறுவனங்களும், அவற்றின் டிவிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என, அறிவித்துள்ளது. இதுநாள் வரை, இந்த இயங்கு தளத்தை, தன்னுடைய தயாரிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தது, எல்.ஜி.,
இனி, இந்த இயங்குதளம், எல்.ஜி., டிவிக்கான பிரத்தேயகமான தளமாக இருக்காது. பிற 'பிராண்டு'களான, 'ஆர்.சி.ஏ., அயோன்ஸ், கொன்கா' போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு, விரைவில் சந்தைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில், 'வெப் ஓ.ஸ்'., ஆப்பிளின், 'ஐ.ஓ.எஸ்.,' இயங்குதளத்துக்கு போட்டியாக, 'ஸ்மார்ட் போன்' தயாரிப்பில் இருந்தது. நாளடைவில், அது, தன்னுடைய வெளிச்சத்தை இழந்தது, தனிக் கதை.
பின், வெப் ஓ.எஸ்., எல்.ஜி., டிவிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இப்போது, பொதுவுக்கு வந்துள்ளது.
