PUBLISHED ON : ஜூன் 26, 2022

'நாய்ஸ்' நிறுவனம், அதன் முதல் ஸ்மார்ட் மூக்கு கண்ணாடியை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
'நாய்ஸ் ஐ 1' எனும் பெயரில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்கிளாஸ், 'டச் கன்ட்ரோல்' மற்றும் 'கூகுள் அசிஸ்டென்ட்' வசதியுடன் வந்துள்ளது.
வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி இருப்பதால், பல விஷயங்களுக்கு கைகளை பயன்படுத்த அவசியமில்லை என்பது கூடுதல் வசதி. இந்த ஸ்மார்ட் கிளாஸில், தொலைபேசி அழைப்புகளுக்காக 16.2 மி.மீ., ஸ்பீக்கர் டிரைவ், மற்றும் மைக்ரோபோன் உள்ளது.
டச் கன்ட்ரோல் வசதி இருப்பதால், எளிதாக போன் அழைப்புகளை ஏற்கவோ, மறுக்கவோ செய்யலாம். அல்ட்ரா வயலெட் தடுப்பு பாதுகாப்பு கொண்ட இந்த கண்ணாடியில், புளுடூத் வி5.1 இணைப்பு வசதி உள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒன்பது மணி நேரம் பயன்படுத்தலாம். நீர் மற்றும் வியர்வையால் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்ணாடியின் எடை 47 கிராம். கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட 'டைட்டன்' நிறுவனத்தின் 'டைட்டன் ஐ எக்ஸ்' ஸ்மார்ட் கிளாஸுக்கு போட்டியாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது.
விலை: 5,999 ரூபாய்
