PUBLISHED ON : அக் 03, 2020

அண்மையில் நோக்கியா அதன் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த கையோடு, இரண்டு புதிய ஆடியோ சாதனங்களையும் அறிமுகம் செய்துள்ளது. 'நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட்' மற்றும்,'நோக்கியா போர்ட்டபிள் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்' ஆகியவையே அவை.
நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட்
தண்ணீர் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும் இந்த இயர்பட்ஸ். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 30 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும்.
மூன்று வண்ணங்களில் அறிமுகமாகி இருக்கும் இந்த இயர்பட்ஸ், உலக சந்தைகளில் அக்டோபரில் விற்பனைக்கு வருகிறது.
விலை இந்திய மதிப்பில் 5,100 ரூபாய்.
நோக்கியா போர்ட்டபிள் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்:
இந்த ஸ்பீக்கர், 800 எம்.ஏ.எச்., பேட்டரி திறனுடன் வந்துள்ளது. இதனால், நான்கு மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். 3 வாட் ஆடியோ பவருடன், 43 மி.மீ., டிரைவர் அளவு கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் இருக்கின்றன.
மைக்ரோ யு.எஸ்.பி., போர்ட் கொண்ட இந்த ஸ்பீக்கரில், 5.0 புளுடூத் இணைப்பு வசதி உள்ளது. வட்ட வடிவமைப்பை கொண்ட இதன் எடை, 164 கிராம்.
விலை இந்திய மதிப்பில், 3,000 ரூபாய்.
