PUBLISHED ON : அக் 02, 2020

பானாசோனிக் நிறுவனம், ஐந்து புதிய ஹெட்போன் மற்றும் இயர்போன்களை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒயருடன் மற்றும் ஒயர் இல்லாமல் என இரு மாடல்களில் வந்திருக்கும் இவற்றின் விலை, 899 ரூபாயிலிருந்து, 14,999 ரூபாய் வரை ஆகிறது. இவை அனைத்தும் இப்போது, அமேசானில் கிடைக்கின்றன.
பானாசோனிக் எச்.டி.எக்ஸ்., 90
வெளிச் சப்தங்களை கட்டுப்படுத்தும், நாய்ஸ் கேன்ஷலேசன் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கும் இதில், புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தி கொள்ளலாம். 40 மி.மீ., டைனமிக் டிரைவர்கள் கொண்ட இந்த ஹெட்போன், ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 24 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும். மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. விலை: 14,999 ரூபாய்.
பானாசோனிக் எச்.டி.எக்ஸ்., 20
இது ஒயர்லெஸ் இயர்போனாகும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 8.5 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். 9 மி.மீ., டைனமிக் டிரைவர்கள் கொண்டிருக்கிறது. நான்கு வண்ணங்களில் வந்துள்ளது. விலை: 5,999 ரூபாய்.
பானாசோனிக் என்.ஜெ.,310
கிட்டத்தட்ட, எச்.டி.எக்ஸ்., 20 போன்ற தோற்றம் கொண்ட இயர்போன் இது. 6 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் வகையிலான பேட்டரியுடன் வந்துள்ளது. நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. விலை 3,599 ரூபாய்.
பானாசோனிக் டி.சி.எம்., 130 மற்றும் 55
டி.சி.எம்., 130 மற்றும் டி.சி.எம்., 55 இரண்டும் சகாய விலையிலான பானாசோனிக் தயாரிப்பாகும். இவை ஒயருடன் கூடிய இயர்போன்களாகும். இரண்டுமே, 3.5 மி.மீ டிரைவர் கொண்டவை. விலை:
டி.சி.எம்., 130 : 1,399 ரூபாய்
டி.சி.எம்., 55: 899 ரூபாய்.
