உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 06, 2022

அ நிறம் | அளவு
இந்தியாவில், 'நோக்கியா ஜி60 5ஜி' ஸ்மார்ட் போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், '5ஜி' சேவையை பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 'ஜியோ ட்ரூ 5ஜி' சேவையையும் இந்த போனில் பெறலாம். நவம்பர் 7ம் தேதிக்குள், நோக்கியா ஸ்டோரில் முன்பதிவு செய்பவர்களுக்கு கிடைக்கும். கூடவே, அவர்களுக்கு 3,599 ரூபாய் மதிப்பிலான, 'நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட்' இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்
6.58 அங்குல முழு எச்.டி., திரை
கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆண்ட்ராய்டு 12
மூன்று கேமரா செட்அப்
50 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
4,500 எம்.ஏ.எச்., பேட்டரி
20 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
இரண்டு சிம்
இ-சிம் சப்போர்ட்
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
விலை: 6 ஜி.பி., + 128 ஜி.பி.,: 29,999 ரூபாய்
