உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 21, 2021

அ நிறம் | அளவு
'நத்திங்' நிறுவனத்தின் முதல் அறிமுகமான, 'நத்திங் இயர் 1 ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்' இப்போது கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் வெள்ளை நிறத்தில், ஒளிபுகும் வகையில் அறிமுகம் ஆனது இந்த இயர்போன். தற்போது, கூடுதலாக கறுப்பு வண்ணத்திலும் வந்துள்ளது.
வரும் காலத்தில், மேலும் பல வண்ணங்களில், ஒளிபுகும் வகையிலான வடிவமைப்புடன், இந்த இயர்போன் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்ல் பை, அதிலிருந்து விலகி, லண்டனில் நத்திங் எனும் நிறுவனத்தை துவக்கினார்.
கடந்த ஜூலையில் இந்நிறுவனம், நத்திங் இயர் 1 எனும் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை 6,999 ரூபாய் விலையில், இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
