உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 21, 2021

அ நிறம் | அளவு
ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த மின்னஞ்சல் நிறுவனமான 'ஹாட்மெயில்', 'மைக்ரோசாப்ட்' வசமான பின், தற்போது அதன் இணை நிறுவனரான சபீர் பாட்டியா, புதிதாக ஒரு முயற்சியில் இறங்கி உள்ளார். 'ஷோரீல்' எனும் சேவையை அவர் துவக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 'டிக்டாக்' போன்ற ஒன்று தான் இது. ஆனால், இது பொழுதுபோக்குக்கானது அல்ல. வேலை தேடுவோருக்கானது.
வேலை தேடுவோர், தங்களை பற்றிய வீடியோவை இதன் வாயிலாக பகிரலாம். வேலை தேடுவோர் மட்டுமல்ல, துணிகர முதலீட்டாளரை தேடும் தொழில்முனைவோர், மாப்பிள்ளை தேடும் பெண் - பெண்ணை தேடும் மாப்பிள்ளை என பலவகையான தேடல்களுக்கான பகிர்வு தளம் இது. நம் பயோடேட்டாவை வீடியோ வடிவில் இதில் பகிர்ந்துகொள்ளலாம்.
