உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 09, 2022

அ நிறம் | அளவு
'நத்திங் இயர் ஸ்டிக்' எனும் 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்' அக்டோபர் 26ம் தேதியன்று உலகளவில் அறிமுகம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனரான கார்ல் பை, அதிலிருந்து பிரிந்து, 'நத்திங்' எனும் நிறுவனத்தை துவங்கி, இயர்போன் மற்றும் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகிறார்.
இயர்போனை பொறுத்தவரை, இது இரண்டாவது இயர்போனாகும். இதற்கு முன் 'இயர் 1' எனும் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், இந்த இயர்போன் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த இயர்போனின் 'சார்ஜிங் கேஸ்' மற்றவற்றிலிருந்து மாறுபட்டு, உருளை வடிவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அறிமுக தினத்தில், இந்த இயர்போன் குறித்த அனைத்து தகவல்களும் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
