PUBLISHED ON : அக் 09, 2022

பிரபல 'பிட்பிட்' நிறுவனம், இரண்டு ஸ்மார்ட் வாட்சுகள், ஒரு பிட்னஸ் டிராக்கர் ஆகியவற்றை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
'பிட்பிட் வெர்ஸா 4, பிட்பிட் சென்ஸ் 2' என இரு ஸ்மார்ட் வாட்சுகளும், 'பிட்பிட் இன்ஸ்பயர் 3' எனும் பிட்னஸ் டிராக்கரும் அறிமுகம் ஆகியுள்ளன.
இந்த புதிய அறிமுகங்கள், முந்தைய மாடல்களை விட மெலிதாகவும், செளகரியமாகவும் இருக்கும் என, பிட்பிட் தெரிவித்துள்ளது.
இதய துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு, துாக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை கண்காணிக்கும் வசதிகள் இவற்றில் உள்ளன.
வெர்ஸா 4 மற்றும் சென்ஸ் 2 ஆகிய இரண்டும், 6 நாட்கள் தாங்கும் பேட்டரி திறனை கொண்டுள்ளன.
இன்ஸ்பயர் 3 டிராக்கர் 10 நாட்கள் தாங்கும் திறன் கொண்டது.
விலை:
பிட்பிட் சென்ஸ் 2: 24,999 ரூபாய்
பிட்பிட் வெர்ஸா 4: 20,499 ரூபாய்
பிட்பிட் இன்ஸ்பயர் 3: 8,999 ரூபாய்
