'நத்திங் இயர் ஸ்டிக்' இந்தியாவில் விற்பனை துவங்கியது
'நத்திங் இயர் ஸ்டிக்' இந்தியாவில் விற்பனை துவங்கியது
PUBLISHED ON : நவ 20, 2022

அண்மையில் அறிமுகம் ஆன 'நத்திங்' நிறுவனத்தின், 'நத்திங் இயர் ஸ்டிக்' எனும் 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்', விற்பனை இந்தியாவில் 17ம் தேதி முதல் துவங்கி உள்ளது.
சீனாவைச் சேர்ந்த 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்ல் பை, அந்நிறுவனத்திலிருந்து பிரிந்து, தனியாக 'நத்திங்' எனும் நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிறுவனம், 'ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ்' ஆகியவற்றை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது நத்திங் இயர் ஸ்டிக் எனும் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
* தனித்துவமான வடிவமைப்பு
* திருகி திறக்கும் வசதி கொண்டது
* 12.6 மி.மீ., டைனமிக் டிரைவர்கள்
* நீர், துாசி, வியர்வையை தடுக்கும்
* 29 மணி நேரம் தாங்கும் பேட்டரி
* 4.4 கிராம் எடை
* யு.எஸ்.பி., டைப்சி சார்ஜ்
விலை: 8,499 ரூபாய்.
இதற்கு முன் அறிமுகம் ஆகியுள்ள நத்திங் நிறுவனத்தின் 'போன் 1' அல்லது 'நத்திங் இயர்' சாதனங்களை ஏற்கனவே வாங்கி இருந்தால், அந்த வாடிக்கையாளர்களுக்கு 1,000 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
