PUBLISHED ON : டிச 09, 2018

அ நிறம் | அளவு
சிறிதாக, பெரிதாக, அகலமாக, நீளமாக, தடிமனாக, மெலிதாக என அத்தனை வகையிலும் போன்கள் வந்துவிட்டன. அடுத்து பாக்கி இருப்பது, மடித்து வைத்துக் கொள்ளும்படியான போன் மட்டும்தான். சாம்சங், வாவேய் உள்ளிட்ட பல நிறுவனங்கள், இத்தகையக மடிக்கக்கூடிய போன்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில், லேட்டஸ்ட்டாக, மைக்ரோசாப்டும் சேர்ந்துள்ளது.
மைக்ரோசாப்ட் அதன் தயாரிப்புக்கு, 'ஆண்ட்ரோமெடா' என தற்காலிகமாக ஒரு குறியீட்டு பெயரை வைத்துள்ளது. அடுத்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போன் மடிக்க கூடியதாக இருந்தாலும், அது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் அளவைவிட கொஞ்சம் பெரியதாகவே இருக்கும் என்கிறார்கள். இன்னும் சொல்வதென்றால், மடித்தால் போன், விரித்தால் டேப்லெட் என்பது போல் இருக்கும் என சொல்லப்படுகிறது.
