PUBLISHED ON : டிச 09, 2018

அ நிறம் | அளவு
கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. குரோம் உலாவியின், 71வது பதிப்பை, கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
இதில் மிகப்பெரிய பிளஸ்பாயின்ட், தவறான விளம்பரங்கள் தடுக்கப்பட்டுவிடும். நாம் விருப்பப்பட்டு ஒரு தளத்தை அணுக சொடுக்கினால், அது தானாகவே வேறு ஏதாவது ஒரு தளத்தில் தரையிறங்குவது தற்போது சகஜமாகிவிட்டது.
இந்திய புதிய குரோம் 71 பதிப்பில் இது போன்ற பிரச்னைகள் இருக்காது.
நாம் சவுண்டை கட் செய்துவைத்திருந்தாலும் சில இணைப்புகளில் ஆட்டோமேட்டிக்காக சவுண்டு வந்து நம்மை எரிச்சலடைய வைத்துவிடும். இந்த புதிய பதிப்பு அப்படி நடக்காமல் அவற்றின் குரல்வளையை நெரித்துவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக பில்லிங் விவகாரங்களிலும் எச்சரிக்கை அளிக்கும்.
