PUBLISHED ON : டிச 09, 2018

அ நிறம் | அளவு
'ஆப்பிள்' ரசிகர்களின் மனதிற்குள், பட்டாம்பூச்சி பறக்கக் கூடிய ஓர் அறிவிப்பு.
ஏர்போட்ஸ் இயர்போன் - 2, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் மார்ச்சுக்குள் விற்பனைக்கு வந்து விடும் என்கின்றனர்.
'ஒயர்லெஸ் சார்ஜ்' வசதியுடன் அறிமுகமாகும் ஏர்போட்ஸ் இயர்போன் - 2, பல மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. ஏர்போட்ஸ் -2-ல் புளூடூத் ரேஞ்ச் அதிக துாரம் இருக்கும் என்பதோடு, வெகு வேகமாக புளூடூத் மூலம் செல்போனுடன் இணக்க முடியும் என்கின்றனர்.
10 கோடிக்கும் அதிகமான ஏர்போட்ஸ் இயர்போன்கள், 2021ல் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்போட்ஸ் இயர்போன் விலை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும், விலை சற்று அதிகமாகவே இருக்கும் என, தெரிகிறது.
