PUBLISHED ON : டிச 16, 2018

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஒன் பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட் போன், இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய போனில், வார்ப் சார்ஜ், 30 தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம், 20 நிமிடங்களில், ஒரு நாள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், ஸ்மார்ட் போன் சார்ஜ் ஆகி விடும்.
மெக்லாரென் எடிஷனில் ஸ்பெஷல், ஸ்மார்ட்போனை சுற்றி பப்பாளி மஞ்சள் நிறம் பளபளவென மின்னுவதும், அந்த கலருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் தான்.
சிறப்பம்சங்கள்:
* 6.41 அங்குல தொடுதிரை
* 16 + 36 மெகா பிக்சல்
* குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி.,
* 10 ஜி.பி., ரேம் / 256 ஜி.பி., உள்ளீட்டுத் திறன்
* ஆண்ட்ராய்டு 9.0
* வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
* வார்ப் சார்ஜ் 30 பாஸ்ட் சார்ஜிங்
* 3,700 எம்.ஏ.எச்., பேட்டரி
* 'இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார், பேஸ் லாக்' உட்பட பல வசதிகள் இருக்கு. அமேசான் மற்றும் ஒன் பிளஸ் நிறுவனத்தின் விற்பனை மையங்களில் கிடைக்கும்.
விலை: 50,999 ரூபாய்.
