உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 01, 2020

அ நிறம் | அளவு
'பிட்பிட்' நிறுவனம் புதிதாக, மூன்று அணியக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. 'பிட்பிட் சென்ஸ்' 'வெர்ஸா 3', 'இன்ஸ்பைர் 2' என, மூன்று ஸ்மார்ட் வாட்சுகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்துஉள்ளது.
இந்த மூன்று ஸ்மார்ட்வாட்சுகளும், செப்டம்பர் இறுதியில் உலகெங்கும் கிடைக்கும் என தெரிகிறது. இந்தியாவை பொறுத்தவரை, பண்டிகை கால அறிமுகங்களாக விற்பனைக்கு வரும் என கருதப்படுகிறது.'பிட்பிட் சென்ஸ்' தினசரி மன அழுத்தம், இதயதுடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை கண்காணிக்கும் வகையிலும், இ.சி.ஜி., மானிட்டர் ஆகிய வசதிகளுடனும் வந்துள்ளது.
இந்த மூன்று வாட்சுகளுமே, அதிநவீன, 'பியூர்பல்ஸ் 2.0' தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானசென்சார்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
விலை:
சென்ஸ்: 34,999 ரூபாய்
வெர்ஸா: 26,499 ரூபாய்
இன்ஸ்பைர்: 10,999 ரூபாய்
