தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/எல்.ஜி., ஸ்மார்ட் முக கவசம்

எல்.ஜி., ஸ்மார்ட் முக கவசம்

எல்.ஜி., ஸ்மார்ட் முக கவசம்


PUBLISHED ON : ஆக 31, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக, முக கவசம் அணியவேண்டியது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது.இப்போது, முக கவசத்திலும் பல்வேறு கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்தி, புதிய புதிய, முக கவசங்கள் அறிமுகமாகி வருகின்றன.

இந்த வகையில், தற்போது, எல்.ஜி., நிறுவனமும் புதிய வசதிகளுடன் கூடிய புதுமையான முக கவசத்தை தயார் செய்துள்ளது. 'பியூரிகேர் வியரபிள் ஏர் பியூரிபயர் பேஸ் மாஸ்க்' எனும் பெயரில், புதிய வகையிலான முக கவசத்தை இந்நிறுவனம் தயார் செய்துள்ளது.

இந்த முக கவசத்தை அணிந்துகொண்டால், புதிய, சுத்தமான காற்று கிடைக்கும். இதற்கு வசதியாக, இந்த முக கவசத்தில் இரட்டை மின் விசிறிகள் இருக்கின்றன. மேலும், சுவாசத்தை கண்காணிக்கும், 'ரெஸ்பிரேட்டரி சென்சார்' இதில் இருக்கிறது. இதனால் தேவைப்படும் சுவாசத்துக்கு ஏற்ப, மின் விசிறிகள் மூன்று வித வேகத்தில் தானே செயலாற்றும். இந்த முக கவசத்தில், 820 எம்.ஏ.எச்., பேட்டரியும் இணைக்கப்பட்டிருக்கிறது.

இந்த முக கவசம் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us