உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 30, 2020

அ நிறம் | அளவு
நோக்கியா, இந்தியாவில், அண்மையில் புதிதாக, 'நோக்கியா 125' மற்றும், 'நோக்கியா 150 (2020)' என இரண்டு நுழைவு நிலை அடிப்படை போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பியூச்சர் போன்கள் இரண்டுமே, முன்பு வந்ததை போன்ற வடிவி லேயே வந்துள்ளன. இரண்டும், இரட்டை சிம் வசதி கொண்டவை. 'நோக்கியா 125' இரு வண்ணங்களிலும், 'நோக்கியா 150' மூன்று வண்ணங்களிலும் வந்துள்ளன.
நோக்கியா 150
* வி.ஜி.எ. கேமரா வசதி
* 32 ஜி.பி., வரை நினைவுத் திறனை அதிகரிக்கலாம்
* எம்.பி.,3 பிளேயர்
* புளுடூத் வி.3.0
விலை: 2,299 ரூபாய்
நோக்கியா 125
* 4எம்.பி., ரேம்
* 4எம்.பி., சேமிப்புத் திறன்
* 2.4 அங்குல கலர் திரை
* எப்.எம்.,ரேடியோ
* கேமரா கிடையாது
* 1,020 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை: 1,999 ரூபாய்
