PUBLISHED ON : ஜன 22, 2023

'கார்மின்' நிறுவனம், இந்தியாவில், இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்சுகள், 'இன்ஸ்டிங்ட் கிராஸோவர், கிராஸோவர் சோலார்' என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த இரண்டு வாட்சுகளும் ஒரே மாதிரியான சிறப்பம்சங்களுடன் வந்துள்ளன. இவை ஒரு ஹைபிரிட் ஜி.பி.எஸ்., ஸ்மார்ட்வாட்சுகளாகும். இரு வாட்சுகளுக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம் சோலார் மாடல் சூரிய ஒளியிலும் இயங்கும் என்பது மட்டும் தான்.
மேலும், இந்த வாட்சுகள் முரட்டு வாட்சுகளாகும்.
வழக்கமான எல்லா வசதிகளும் இந்த வாட்சில் உள்ளன. கூடுதலாக 'காண்டாக்ட்லெஸ் பேமென் ட்'களையும் சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இன்ன்ஸ்டிங்ட் கிராஸோவர் 60 நாட்களும்; சோலார் மாடல் 70 நாட்களும் தாங்கும்.
விலை: இன்ஸ்டிங்ட் கிராஸோவர்: 55,990 ரூபாய்
இன்ஸ்டிங்ட் கிராஸோவர் சோலார்: 61,990 ரூபாய்.

