
நம் நாட்டில், 4கே டெலிவிஷன்களே இன்னும் அதிகமாக பிரபலமாகாத நிலையில், சாம்சங் நிறுவனம், '8கே., கியு.எல்.இ.டி., டிவி'யை அறிமுகம் செய்ய இருக்கிறது.
வரும் மார்ச்சில், 60 நாடுகளில், இந்த புதிய, 'டிவி'யை அறிமுகம் செய்கிறது சாம்சங். இந்நிறுவனம், 8கே., கியு.எல்.இ.டி., 'டிவி'யை துணிந்து அறிமுகம் செய்வதற்கு அடிப்படை காரணம், விரைவில், '5ஜி' தொழில்நுட்ப வசதி வந்துவிடும் என்பது தான். '5ஜி' வந்துவிட்டால், 'கேம்ஸ், வீடியோ' ஆகியவற்றை அதிக தரத்துடன் சுலபமாக பார்க்கலாம்; அப்போது, இத்தகைய, 'டிவி'களுக்கான தேவையும் அதிகரிக்கும்.
ஏற்கனவே, 8கே., 'டிவி'யை கொரியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்துள்ளது சாம்சங். இந்த புதிய, 8கே., கியு.எல்.இ.டி., 'டிவி' இந்தியாவில் அறிமுகம் ஆவது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த, 'டிவி' 55 இஞ்ச் முதல், 98 இஞ்ச் வரையிலான ஆறு அளவுகளில் இருக்கும் என தெரிகிறது.
மொத்தத்தில் முந்தும் முயற்சியில் இருக்கிறது சாம்சங்.

