PUBLISHED ON : ஜன 13, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாம்சங் நிறுவனம், கேலக்ஸி எஸ் 10, போல்டபிள் ஸ்மார்ட் போன் ஆகிய இரண்டு போன்களையும், பிப்ரவரி 20ம் தேதியன்று அறிமுகப்படுத்த இருக்கிறது. 'மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்' கண்காட்சி நடக்கும் போது, இந்த போன்களை சாம்சங் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிப்., 20ம் தேதி அன்று, அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.

