
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபைல் போனிலும், பாதுகாப்பு சாதனங்களிலும் இருக்கும் கேமரா, அடுத்த கட்டமாக, சமையலறை சாதனங்களுக்குள்ளும் வந்துவிட்டது.
வேர்ல்பூல் நிறுவனம், உணவு தயாரிக்கும் அவனில் கேமரா வைத்து, 'ஸ்மார்ட் அவனை' தயாரித்துள்ளது. சமைப்பதற்காக நாம் வைக்கும் உணவு பொருட்களை கேமரா அடையாளம் கண்டு, அதற்கு ஏற்றவாறு சமையல் மோடுகளை அதாவது, நேரம், வெப்பநிலை என அனைத்தையும் அதுவே செட் செய்துகொள்ளும். அது மட்டுமல்ல; உங்கள் பொபைல் போனில் இதற்கான ஆப் ஐ டவுண்லோடு செய்துகொண்டால், போனில் லைவ் ஆக பார்த்துக் கொள்ளலாம். ஹாலில், 'டிவி' பார்த்துக் கொண்டே, சமையலறையில் இருக்கும் அவன் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்ளலாம்! வாய்ஸ் கமெண்ட் மூலமாக கன்ட்ரோலும் பண்ணலாம்.

