PUBLISHED ON : ஜன 13, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூப்பரான பார்ட்டி ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது சோனி. ஸ்பீக்கர் குவாலிட்டி, கரோகி வசதி போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்...
இந்த ஜி.டி.கே.பி.ஜி.10 பார்ட்டி ஸ்பீக்கரை விரித்து வைத்தால், மினி டேபிள் ரெடி. கூல்டிரிங்ஸ் பாட்டில், கப் போன்றவற்றை வைப்பதற்கு தனி வசதி இருக்கிறது. வாட்டர்புரூப் ஸ்பீக்கர் சிஸ்டம் என்பதால் பயப்படத் தேவையில்லை.
பிறகென்ன, ஸ்பீக்கரை விரித்து, கப், பாட்டில்களை மேலே வைத்து, பாட்டோடு பார்ட்டியை கொண்டாட வேண்டியது தான்!
இன்னும் இந்திய சந்தைக்கு வரவில்லை என்பது மட்டும் தான் இப்போதைய கவலை!

