
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லாமே டிஜிட்டல் யுகத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் காலமிது. வீட்டில் அழகுக்காக, பிரேம் போட்ட ஓவியங்களை சுவரில் மாட்டி, காட்சிக்கு வைப்போம். இப்போது, அதிலும் டிஜிட்டல் புகுந்துவிட்டது. நம் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் ஓவியத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட் ஆர்ட் டிஸ்பிளே மெமரியில், ஓவியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். டிஸ்பிளேவை தொடாமலே மொபைல் போன் மூலம், சூழலுக்கும் மனதுக்கும் ஏற்ப ஓவியத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் ஆர்ட் டிஸ்பிளேவில் முன்னணி நிறுவனமான நெட்கியர், புதிதாக மியுரல் ஜெனரேஷன், 3.0 கேன்வாஸ் எனும் டிஸ்பிளேவை இரண்டு சைஸ்களில் அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சம்
* 8 ஜிபி உள்ளீட்டு திறன்
* 2 ஜிபி ரேம்
* லைட் சென்சார்
* வை - பை இணைப்பு
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

