
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்னொரு நபரின் உதவியின்றி, நாமே நம்மை வீடியோ எடுக்க உதவும், 'கூகுள் கிளிப்ஸ்' கேமராவுக்கு போட்டியாக வந்திருக்கிறது, ஒஸ்பாட் டெய்ல் கேமரா.
சென்சார் மூலமாக நாம் திரும்பும் நகரும் இடத்தை நோக்கி கேமரா லென்சும் திரும்புகிறது. அது மட்டுமின்றி, சைகைகள் செய்வதன் மூலம் அதை கன்ட்ரோலும் செய்யலாம்.
கேமராவுக்கு எதிராக நம் உள்ளங்கையை காட்டினால் அது ஸூம் செய்துகொள்ளும். இதயம் போல விரல்களில் வடிவம் காட்டினால், ஸூம் செய்வதை நிறுத்திவிடும்.
12 மெகா பிக்ஸல், 3.5x ஆப்டிக்கல் ஸூம் உள்ளது. 7.3 இஞ்ச் உயரம் 3.3 இஞ்ச் அகலம் கொண்டது. விளையாட்டு வீரர்கள், யு டியூப் பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது. இந்திய ரூபாயில் விலை, 31 ஆயிரம்.

