உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 20, 2021

அ நிறம் | அளவு
'சாம்சங்' நிறுவனம், இம்மாதம், 17ம் தேதி நடத்த இருக்கும் காணொலி நிகழ்ச்சியில், 'சாம்சங் கேலக்ஸி ஏ 52' மற்றும், 'சாம்சங் கேலக்ஸி ஏ 72' ஆகிய 'ஸ்மார்ட் போன்' களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போன்களில், இந்த இரண்டு 'ஸ்மார்ட்போன்'களுக்கும் முக்கியமான இடம் உண்டு. மேலும், இந்த இரு போன்கள் குறித்து, பல யூக செய்திகளும் அண்மைக் காலமாக வந்துகொண்டிருக்கின்றன.இந்த இரு போன்களும், 4ஜி மற்றும், 5ஜி வகைகளில் அறிமுகம் ஆகும் என்றும், நடுத்தர விலை கொண்ட போனாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. உலகளவிலான இந்த அறிமுகத்தை அடுத்து, வெகு விரைவில் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
