சாம்சங் 'போல்டபிள்' போன்கள் 24ம் தேதி முன்பதிவு துவக்கம்
சாம்சங் 'போல்டபிள்' போன்கள் 24ம் தேதி முன்பதிவு துவக்கம்
PUBLISHED ON : ஆக 23, 2021

'சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3' மற்றும் 'இசட் பிளிப் 3' ஆகிய இரண்டு, 'போல்டபிள்' போன்களின் விலை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த போன்களுக்கான முன்பதிவு, இந்திய சந்தையில், 24ம் தேதி முதல் துவங்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 போன், 12 ஜி.பி., ரேம் மற்றும் 256 ஜி.பி., சேமிப்பகம் கொண்டதாகவும், 12 ஜி.பி., ரேம் மற்றும் 512 ஜி.பி., சேமிப்பகம் கொண்டதாகவும், இரண்டு விதங்களில் கிடைக்கும்.
இதில் 256 ஜி.பி., கொண்ட போனின் விலை 1.50 லட்சம் ரூபாய் ஆகிறது. 512 ஜி.பி., கொண்ட போனின் விலை 1.58 லட்சம் ரூபாய் ஆகிறது. சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3 போனும் இரண்டு விதங்களில் கிடைக்கும். 8 ஜி.பி., ரேம், 128 ஜி.பி., சேமிப்பகம் கொண்டதாகவும், 8 ஜி.பி., ரேம், 256 ஜி.பி., சேமிப்பகம் கொண்டதாகவும் இரு விதங்களில் கிடைக்கும்.
இதில் 8 ஜி.பி., x 128 ஜி.பி., போனின் விலை 85 ஆயிரம் ரூபாய். 8 ஜி.பி., x 256 ஜி.பி., போனின் விலை 89 ஆயிரம் ரூபாய். மேலும் அறிமுக சலுகைகளும் இருக்கின்றன. இந்த போன்களுக்கான முன்பதிவை 24ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 9ம் தேதி வரை செய்து கொள்ளலாம். விற்பனை அடுத்த மாதம் 10ம் தேதி முதல் துவங்குகிறது.
