உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 22, 2021

அ நிறம் | அளவு
'சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி' ஸ்மார்ட்போன், இந்தியாவில் 25ம் தேதி அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இந்நிறுவனம், 'கேலக்ஸி எம் 32 4ஜி' போனை அறிமுகம் செய்தது.
இந்த போனில் 6 ஆயிரம் எம்.ஏ.எச்., பேட்டரி இடம்பெற்றது குறித்து சந்தையில் அப்போது பெரிதாக பேசப்பட்டது.
இப்போது அடுத்தக் கட்டமாக, 'கேலக்ஸி எம்32 5ஜி' போன் அறிமுகம் ஆகிறது. இருப்பினும், இந்த போனில் 5 ஆயிரம் எம்.ஏ.எச்., பேட்டரி தான் இடம்பெறும் என்கினறனர்.
சிறப்பம்சங்கள்:
6.5 அங்குல எச்.டி., திரை
48 மெகா பிக்ஸல் கேமரா
13 மெகா பிக்ஸல் செல்பி கேமரா
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
ஆண்ட்ராய்டு 11
