உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 08, 2021

அ நிறம் | அளவு
சாம்சங் நிறுவனம், இந்தியா உள்பட 14 நாடுகளில், 'சாம்சங் டிவி பிளஸ்' சேவையை அறிமுகம் செய்துள்ளது. இது செயலி மூலம் வழங்கப்படும் சேவையாகும்.
இந்த சேவையை பயன்படுத்தி, சாம்சங் ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட சில டிவி சேனல்களை இலவசமாக பார்க்கலாம். கட்டணம் செலுத்தியும் டிவி சேனல்களை பார்க்கலாம்.
இந்த டிவி பிளஸ் சேவை வாயிலாக, செய்திகள், தொழில்நுட்பம், அறிவியல், விளையாட்டு, இசை, திரைப்படம் என ஆகியவற்றை உடனடியாக பார்க்கலாம்.
செட் ஆப் பாக்ஸ் போன்ற கூடுதல் சாதனங்கள் எதுவுமின்றி, டிவி சேனல்களை இதன் மூலம் பார்க்கலாம்.
இந்த சேவையை, 2017ம் ஆண்டுக்கு பிறகு வாங்கிய ஸ்மார்ட் டிவி, கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் பெறலாம்.
