PUBLISHED ON : ஏப் 09, 2021

'கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ்' எனும் லாப நோக்கற்ற நிறுவனம், இந்த ஆண்டில் வாங்குவதற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் பல்வேறு போன்களை சோதித்து, நுகர்வோர் வாங்குவதற்கு ஏற்ற போன்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
அந்த வகையில், ஐபோன் வரிசையில், 'ஐபோன் 12 புரோ மேக்ஸ்' போனை சிறந்த போனாக அறிவித்துள்ளது. நீடித்து நிற்கும் பேட்டரி, சிறந்த கேமரா, பெரிய திரை, 5ஜி இணைப்பு வசதி ஆகிய காரணங்களை முன்னிட்டு, இந்த போனை சிறந்ததாக தேர்ந்தெடுத்துள்ளது.
ஆண்ட்ராய்டு போன்கள் வரிசையில், 'சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி' போன் சிறந்த போனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரை, ஜூம் திரை, சிறந்த பேட்டரி திறன் போன்ற காரணங்களால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பட்ஜெட் போனாக, 'ஒன்பிளஸ் நோர்டு என் 10' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 41.5 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி, மிகச்சிறந்த செயல்திறன் ஆகியவை இந்த போனுக்கு சிறப்பு சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஒன்பிளஸ் நோர்டு என் 100' போன் 'ஆல் டே பேட்டரி லைப்' எனும் வகையின் கீழ், சிறந்த போனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 48.5 மணி நேரம் பேட்டரி நீடித்து நிற்பதால், இந்த தேர்வு.
