தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'சாம்சங்'கின் சத்தமில்லா அறிமுகம்

'சாம்சங்'கின் சத்தமில்லா அறிமுகம்

'சாம்சங்'கின் சத்தமில்லா அறிமுகம்


PUBLISHED ON : ஆக 07, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்சங் நிறுவனம் எந்த சப்தமும் இல்லாமல், கடந்த வெள்ளியன்று, 'சாம்சங் கேலக்ஸி ஏ 23 5ஜி' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், இதன் விலை மற்றும் எந்தெந்த நாடுகளில் கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை இன்னும் தெரிவிக்கவில்லை.

இதற்கு முந்தைய மாடலான 'சாம்சங் கேலக்ஸி ஏ 22 5ஜி' இந்தியாவில், கடந்த ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டது. 6 ஜி.பி., ரேம் மற்றும் 128 ஜி.பி., சேமிப்பகம் கொண்ட மாடல், 19 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் அறிமுகம் ஆனது. கேலக்ஸி ஏ 23 5ஜி போனின் விலை, இதைவிட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்

* ஆண்ட்ராய்டு 12

* 4/6/8 ஜி.பி., ரேம் மாடல்கள்

* 64/128 ஜி.பி., சேமிப்பக வசதி

* 1 டி.பி., வரை அதிகரிக்கலாம்

* 6.6 அங்குலம் டிஸ்ப்ளே

* 50 எம்.பி., பிரதான கேமரா

* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி

* 197 கிராம் எடை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us