PUBLISHED ON : செப் 01, 2021

'வெஸ்டர்ன் டிஜிட்டல்' நிறுவனம் புதிதாக, 'சான்டிஸ்க் ஐஎக்ஸ்பேண்டு ஒயர்லெஸ் சிங்க்' எனும் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
இது, இருவிதங்களில் உதவக்கூடியது. சார்ஜ் ஏற்றுவதற்காக 15 வாட் ஒயர்லெஸ் சார்ஜர் இதில் உள்ளது. அத்துடன் இதில், 'ஆட்டோமெட்டிக் டேட்டா ஸ்டோரேஜ்' வசதியும் உள்ளது.
இருப்பினும், இந்த வசதி குறிப்பிட்ட சில போன்களில் மட்டுமே பயன்படும். நம்மிடம் இருக்கும் போனுக்கு உதவுமா என்பதை அறிந்து வாங்குவது நல்லது.
இந்த சார்ஜரில், 256 ஜி.பி., சேமிப்பக வசதி உள்ளது. இதனால் நமது போட்டோ, வீடியோ ஆகியவற்றை முழு துல்லியத்துடன், 'பேக் அப்' செய்துகொள்ளலாம். சார்ஜரில் வைத்ததுமே, தானாக சேமிக்கப்பட்டுவிடும்.
மேலும் இந்த சேமிப்பு வசதியை, மூன்று குடும்ப நபர்கள் வரை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
இந்த பேக் அப் வசதி கொண்ட சார்ஜர் தவிர, இந்த சேமிப்பக வசதி இல்லாத 15 வாட் சார்ஜரும் அறிமுகம் ஆகியுள்ளது.
விலை :
* சேமிப்பு வசதியுடன் கூடிய சார்ஜர்: 9,999 ரூபாய்
* சேமிப்பு வசதி இல்லாத சார்ஜர்: 2,999 ரூபாய்.
