PUBLISHED ON : செப் 03, 2021

மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும், 'நத்திங் இயர் 1 ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்,' இந்தியாவில் இம்மாதம் 31ம் தேதியன்று, நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.
இந்த இயர்பட்ஸ், கடந்த ஜூலையில் அறிமுகம் ஆனது.
சீனாவை சேர்ந்த, 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்ல் பை, அதிலிருந்து விலகி, லண்டனில் தனியாக, 'நத்திங்' எனும் நிறுவனத்தை துவங்கி உள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு தான் இந்த இயர்பட்ஸ்.
உள்ளே இருப்பவை வெளியே தெரியும் வகையிலான வடிவமைப்பை கொண்டிருக்கும், இந்த நத்திங் இயர்பட்ஸ், பல நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், இயர்பட்ஸ் 5.7 மணி நேரம் செயல்படும். அதே நேரம் இதன், 'கேஸ்' 34 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும். ஒயர்லெஸ் சார்ஜரையும் இதற்கு பயன்படுத்தலாம்.
விலை: 5,999 ரூபாய்.
