
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜப்பானின் சோனி நிறுவனம் அண்மையில், 'பிளேஸ்டேஷன் கிளாசிக்'ஐ அறிமுகம் செய்தது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த பிளேஸ்டேஷன் விற்பனை காற்றுப் போன பலுானாகிவிட்டது. பிளேஸ்டேஷன் கிளாசிக் குறித்து வாடிக்கையாளர்களின் கருத்துகளும் ஒன்றுபோல் இல்லை. சிலர் நன்றாக இருக்கிறது என்பதில் ஆரம்பித்து பெருத்த ஏமாற்றம் என்பது வரை, மாறுபட்ட கருத்துக்களால் குழம்பிக் கிடக்கிறது சந்தை.
அறிமுகமான ஒரு வாரத்தில், 1 லட்சத்து, 20 ஆயிரம் பிளேஸ்டேஷன்கள் விற்பனை ஆகியுள்ளன. அதே சமயம் போட்டியாளரான எஸ்.என்.இ.எஸ்., கிளாஸிக் விற்பனை, 3 லட்சத்து 69 ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டுஉள்ளது.

