PUBLISHED ON : ஜூலை 24, 2022

'அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' மற்றும் நீர்புகா 'ஐ.பி.எஸ்க்., 5' தரம் ஆகியவற்றுடன், 'ஜே.பி.எல்., லைவ் புரோ 2' எனும் 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்' இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
இதில், ஆறு மைக்ரோபோன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11 மி.மீ., டைனமிக் டிரைவர்களுடன், 'ஸ்டெம்' வடிவில் வந்துள்ளது. இந்த இயர்போனில் இருக்கும் இயர்பட்சுகளை கழட்டாமலே, சுற்றுப்புற சப்தங்களில் கவனம் செலுத்த முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
போன் அழைப்புகளின் போது வெளிப்புற இடையூறுகளை தவிர்க்கும் வகையில், ஆறு மைக்ரோபோன்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள 'வாய்ஸ்அவேர்' வசதியை கொண்டு, எதிர்முனையில் இருப்பவருக்கு, நம்முடைய குரல் எவ்வளவு கேட்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்து, அதன்படி வைத்துக் கொள்ளலாம்.
மேலும், ஒரு புளுடூத் சாதனத்திலிருந்து, இன்னொரு சாதனத்துக்கு எளிதாக இணைப்பை மாற்றிக் கொள்ளலாம். இதன் பேட்டரி 40 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும். இயர்பட்ஸ் 10 மணி நேரமும்; 'சார்ஜிங் கேஸ்' 30 மணி நேரமும் தாங்கும். முழுமையாக சார்ஜ் ஏற, இரண்டு மணி நேரம் பிடிக்கும்.
அறிமுக விலை: 13,999 ரூபாய்.
