PUBLISHED ON : ஜூலை 28, 2021

பிரபல 'போஸ்' நிறுவனத்தின், 'ஸ்லீப்பட்ஸ் ௨ ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்' இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த இயர்பட்ஸ், கடந்த ஆண்டு செப்டம்பரில், அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் அறிமுகம் ஆன போதும், இந்தியாவில் இப்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போஸ் ஸ்லீப்பட்ஸ் 2 இயர்பட்ஸ் ஒரே ஒரு கலரில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் உடன் தூங்குவது எளிதாக இருப்பதாக, இந்நிறுவனத்தின் ஆய்வின்போது வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 10 மணி நேரம் பயன்படுத்தலாம். முழுமையாக சார்ஜ் ஏற, 6 மணி நேரம் பிடிக்கும். சார்ஜிங் கேஸ் முழுமையாக சார்ஜ் ஏற, 3 மணி நேரம் ஆகும். இதன் மூலமாக கூடுதலாக, 30 மணி நேரம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். சாதனங்களில்,'போஸ் ஸ்லீப்' செயலியை பதிவிறக்கி, புளுடூத் வாயிலாக இணைத்துக் கொள்ளலாம். நாம் தூங்குவதற்கு ஏதுவாக, பல்வேறு மியூசிக் டிராக்குகளை இதன் வாயிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
விலை: 22,900 ரூபாய்.
