உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 27, 2021

அ நிறம் | அளவு
'சாம்சங்' நிறுவனம், புதிய டிவி ஒன்றை, தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'தி செரிப் 65' எனும் பெயரில் இந்த டிவி அறிமுகம் ஆகியுள்ளது. இந்த டிவி, 65 அங்குல திரை கொண்டதாகும்.
சாம்சங் நிறுவனம், செரிப் மாடலில் இதற்கு முன் 43, 50, 55 அங்குல அளவுகளில் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. செரிப் வரிசை டிவி, புகழ்பெற்ற மரச் சாமான்கள் வடிவமைப்பாளர்களான, 'ரோனன் அண்டு எர்வான் பொரோலெக்' உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய 65 அங்குல மாடல் டிவி, இதற்கு முன் வந்த டிவிகளின் அம்சங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. திரையின் அளவு மட்டுமே மாறி உள்ளது. இதன் விலை, இந்திய மதிப்பில் 1.81 லட்சம் ரூபாய் ஆகிறது. விரைவில் உலக சந்தைகளில் இந்த டிவி அறிமுகம் செய்யப்படும் என, சாம்சங் தெரிவித்துள்ளது.
