PUBLISHED ON : நவ 25, 2018

பள்ளி செல்ல ஆட்டோவிலோ, வேனிலோ, ஏறிய குழந்தை பள்ளிக்குச் சென்று சேர்ந்ததா, வாக்கிங் போகிறேன் என்று சென்ற வயதான அப்பா தற்போது எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் தெரியாமல், அடிக்கடி நகம் கடிக்கும் நபரா நீங்கள்?
அவர்களை டிராக் செய்ய, நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய இரண்டு வகையான கருவிகளை அறிமுகம் செய்துள்ளது, பானாசோனிக் இந்தியா இன்னோவேஷன் சென்டர்.
'கீ செயின்' போல் உள்ள இந்த கருவியை, குழந்தையின் கழுத்தில் தொங்கவிட்டு விட்டால் போதும்; ஸ்மார்ட் போனில், 'ஸீகிட் ஆப்' வாயிலாக, குழந்தையின் நகர்வை, 'டிராக்கிங்' செய்ய முடியும். இதற்கு, 'கிளவுட்' தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகின்றனர்.
இரண்டு வகையான கருவிகளை, பானாசோனிக் அறிமுகப்படுத்த உள்ளது.
'ஸீகிட் எட்ஜ்' கருவியின் விலை, 1,599 ரூபாய்; 'ஸீகிட் லுாப்'பின் விலை, 1,299 ரூபாய். இவை, டிசம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வருகின்றன.
