தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஸ்மார்ட் டூத் பிரஷ்கள்

ஸ்மார்ட் டூத் பிரஷ்கள்

ஸ்மார்ட் டூத் பிரஷ்கள்


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பற்கள் பராமரிப்பு பிராண்டான, 'ஓரல்-பி' நிறுவனம், 'நுகர்வோர் மின்னணு கண்காட்சி 2022'ல், மூன்று புதிய 'ஸ்மார்ட் டூத் பிரஷ்'களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த டூத் பிரஷ்களை ஐபோனுடன் இணைத்துக் கொள்ளலாம்.

ஐபோனுடன் இந்த டூத் பிரஷை இணைப்பதன் வாயிலாக, 'ரியல் டைம் பீட்பேக், பிரஷர் கன்ட்ரோல், பிரஷிங் டைம்' போன்ற தனிப்பட்ட தரவுகளை பெறலாம். பற்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து தேய்த்தால் எச்சரிக்கும். குறைவான அழுத்தம் கொடுத்தால் அதையும் தெரிவிக்கும். 7 விதமான 'கிளீனிங் மோடு'கள் கொண்டது இந்த பிரஷ்.

ஓரல்-பி ஐ.ஓ.,4, ஐ.ஓ.,5 மற்றும் ஐ.ஓ.,10 என மூன்று மாடல்கள் அறிமுகம் ஆக இருக்கின்றன. இதில் முதல் இரண்டும் நுழைவு நிலை பிரஷ்களாகும். இந்த இரண்டு பிரஷ்களின் விலையும் 100 டாலருக்குள் அதாவது, இந்திய மதிப்பில் 7,500 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us