PUBLISHED ON : டிச 02, 2018

அ நிறம் | அளவு
மொபைல் போனுக்கு, 'சார்ஜ்' போட, 'பவர் பேங்க்' வேணும். அந்த, 'பவர் பேங்க்'குக்கு, 'சார்ஜ்' போட, 'கரன்ட்' வேணும்.
இப்ப, 'கரன்ட்' கூட வேண்டாம். ஏன்னா, சூரிய ஒளியில், 'சார்ஜ்' ஏற்றும், 'பவர் பேங்க்'கை அறிமுகப்படுத்தி உள்ளது, யுபான். இந்த, எஸ்.எல்., 6067 'பவர் பேங்க்'கின் திறன், 6,000 எம்.ஏ.எச்., வீட்ல, 'கரன்ட்' இருக்கும் போதும், 'சார்ஜ்' ஏத்திக்கலாம்.
எவ்வளவு, 'சார்ஜ்' பவர் மீதம் இருக்கிறது என்பதை, 'இண்டிகேட்டர் லைட்' மூலம் தெரிந்து கொள்ளலாம். ஓர் ஆண்டு வாரண்டியும் உண்டு.
விலை: 1,299 ரூபாய்.
