உள்ளடக்கத்திற்கு செல்ல

சோனி 'பி.எஸ்.,5' புதிய மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
சோனி 'பி.எஸ்.,5' புதிய மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
PUBLISHED ON : அக் 09, 2022

அ நிறம் | அளவு
'சோனி' நிறுவனம், அதன் 'பிளேஸ்டேஷன் 5' புதிய மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த மாடல், துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலை விட, பலவிதங்களில் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடலில், முன்பை விட சிறிய அளவிலான 'மதர்போர்டு'ம் அதிகம் வெப்பம் ஆகாமல் இருக்க மேம்படுத்தப்பட்ட கூலிங் சிஸ்டமும் உள்ளன.
மேலும், முதலில் அறிமுகம் ஆன பிளேஸ்டேஷன் 5 மாடலை விட, இந்த புதிய மாடலின் எடையும் குறைவாக இருக்கும்.
இத்துடன், இந்த மாடலில் 'டிடாச்சபிள் டிஸ்க் டிரைவ்' உள்ளது. கேமிங் கன்சோலுடன் 'யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' வாயிலாக இதை இணைத்துக் கொள்ள முடியும்.
