PUBLISHED ON : ஜன 30, 2022

சோனி நிறுவனம், அண்மையில் புதிதாக சில ஆடியோ தயாரிப்புகளை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சோனி எஸ்.ஆர்.எஸ் - என்.பி., 10, சோனி எஸ்.ஆர்.எஸ்., - என்.எஸ்., 7 என, இரண்டு ஒயர்லெஸ் நெக்பேண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் டபுள்யு.எல்.ஏ., - என்.எஸ்., 7 ஒயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.
இவை வீட்டிலிருந்து பணிபுரிவது மற்றும் வீட்டில் சினிமா பார்ப்பது ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், சோனி எஸ்.ஆர்.எஸ் -என்.பி., 10 இசை கேட்கவும் அழைப்புகளை ஏற்கவும் சிறந்தது. எஸ்.ஆர்.எஸ்., - என்.எஸ்., 7 சாதனம், சினிமா பார்க்கும் அனுபவத்தை சிறப்பாக்க உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, டபுள்யு.எல்.ஏ., - என்.எஸ்., 7 ஒயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர் உடன் இணைக்கப்படும்போது, டால்பி அட்மோஸ் வசதியுடன் சினிமா பார்க்க இயலும். இந்த டிரான்ஸ்மிட்டர், சோனியின் வேறு எந்தெந்த இயர்போன் மற்றும் ஹெட்போன்களுடன் இணைத்து பார்க்க முடியும் என்பதற்கான பட்டியலையும், சோனி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
விலை:
சோனி எஸ். ஆர்.எஸ்., - என்.பி., 10: 11,990 ரூபாய்
எஸ்.ஆர்.எஸ்., - என்.எஸ்., 7: 11,990 ரூபாய்
டபுள்யு.எல்.ஏ., - என்.எஸ்., 7: 22,990 ரூபாய்
